Headlines

SIS முன்னாள் பிரதானி சுரேஷ் சல்லே திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, சுரேஷ் சல்லே 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை, அவரது நிலைமையைக் கண்டறிய அவரைப் பார்வையிட குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவரது நிலைமை நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, நேற்று (24) அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், வைத்தியரின் ஆலோசனையின் பேரில் அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *