சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு, அவரது உழைப்பை விடத் திட்டமிட்ட சந்தைப்படுத்தல் (marketing) நகர்வுகளே முக்கிய காரணம் என மூத்த பத்திரிகையாளர் ‘வலைப்பேச்சு’ பிஸ்மி கூறியுள்ளது, திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஸ்மி தனது பேச்சில், “சிவகார்த்திகேயனின் முன்னாள் மேலாளர், அவரைப் பற்றிய எதிர்மறைச் செய்திகள் வராமல் தடுத்தார். மேலும், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களை மிஞ்ச வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு படத்திற்குப் பிறகும் தனது சம்பளத்தை சிவகார்த்திகேயன் திட்டமிட்டு உயர்த்தினார்,” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
“‘அமரன்’ திரைப்படம் உண்மைச் சம்பவம் என்பதால் வெற்றி பெற்றது, ஆனால், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘மதராஸி’ படமே சிவகார்த்திகேயனின் உண்மையான பலத்தைச் சோதிக்கும்,” எனவும் பிஸ்மி கூறியுள்ளார். “அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான்” என ரசிகர்கள் பேசிவருகின்ற நிலையில், பிஸ்மியின் இந்தக் கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.