ஐ.தே.க. மாநாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாசிம்: ஐ.ம.ச. முடிவை மீறினரா?
கொழும்பு: இன்று (20) நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) 79ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) முக்கிய உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஐ.ம.ச. கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மாத்திரமே கலந்துகொள்வார் என அக்கட்சி தீர்மானித்திருந்ததாக முன்னர் செய்திகள் வெளியான நிலையில், இவர்கள் கலந்துகொண்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது.
இவர்களுடன், மனோ கணேசன், ப. திகாம்பரம், ரவூப் ஹக்கீம், வே. இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வு, அரசியல் அரங்கில் புதிய கூட்டணிகளுக்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.
