Headlines

இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அவதானம்: 100 mm இற்கும் அதிக கனமழையால் 6 மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் இன்று (அக்டோபர் 16) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 mm இற்கும் அதிகமான மிகக் கனமழை வீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது. பொதுமக்கள் மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *