Headlines

இந்த வார ஓடிடி ரிலீஸ்: ‘கூலி’ முதல் ‘மீஷா’ வரை – முழுப் பட்டியல்!

சென்னை: இந்த வார இறுதியில், தென்னிந்தியாவின் பல முக்கியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்தின் ‘கூலி’ முதல் கதிர் நடித்துள்ள ‘மீஷா’ வரை, ஓடிடி பிரியர்களுக்கு இந்த வாரம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையவுள்ளது.


இந்த வாரம் வெளியான மற்றும் வெளியாகவுள்ள முக்கியப் படங்கள்:

  • கூலி (Coolie): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படம், நேற்று (11) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.
  • மீஷா (Meesha): நடிகர் கதிர் மலையாளத்தில் அறிமுகமான, அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்த இப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இன்று (12) தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது.
  • டிடெக்டிவ் உஜ்வலன் (Detective Ujjwalan): மலையாள மிஸ்ட்ரி திரைப்படமான இது, LionsGatePlay தளத்தில் இன்று (12) தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.
  • பகாசுரா ரெஸ்டாரன்ட் (Bakasura Restaurant): தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த திகில்-காமெடி திரைப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இன்று (12) தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
  • ரேம்போ இன் லவ் (RAMBO IN LOVE): ரொமான்டிக்-காமெடி தெலுங்கு வெப் தொடரான இது, ஜியோ சினிமா ஓடிடியில் இன்று (12) வெளியாகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *