தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: பெண் பலி, 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்!
கொழும்பு: கலனிகம மற்றும் கஹதுடுவ இடமாறிகளுக்கு இடையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட கோர வீதி விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று குழந்தைகள் உட்பட மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் ஹோமாகம மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
