2 கோடி ரூபாய் தங்கம் கடத்திய விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது!
கொழும்பு: சுமார் 20 மில்லியன் ரூபாய் (2 கோடி) பெறுமதியான தங்கத்தைக் கடத்த முயன்ற, இலங்கை விமானப்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வருடங்களாக விமானப்படையில் பணியாற்றும் 37 வயதான குறித்த சந்தேகநபர், 550 கிராம் எடையுடைய 40 தங்க பிஸ்கட்டுகளைத் தனது இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, ஊழியர் வாயில் வழியாக வெளியேற முயன்றுள்ளார். உடல் பரிசோதனையின்போதே இவர் பிடிபட்டுள்ளார்.
“பதவி, சார்புநிலை பாராமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம்,” எனக் குறிப்பிட்டுள்ள சுங்கத் திணைக்களம், அனைத்து விதமான சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராகவும் தமது நடவடிக்கை தொடரும் என உறுதியளித்துள்ளது.
