2025 இரண்டாம் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 4.9% வளர்ச்சி: புள்ளிவிபரவியல் திணைக்களம்
கொழும்பு: 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) அறிவித்துள்ளது.
இதன்படி, விவசாயத் துறை 2.0 சதவீத வளர்ச்சியையும், கைத்தொழில் துறை 5.8 சதவீத வளர்ச்சியையும், சேவைகள் துறை 3.9 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. நாட்டின் இந்த பொருளாதார வளர்ச்சி, தொடர்ச்சியான மீட்சியைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2015ஆம் ஆண்டின் நிலையான விலைகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,749,504 மில்லியன் ரூபாயிலிருந்து, 2,883,559 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
