கொழும்பு: இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவின் ஏனைய பகுதிகளிலும் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
