கொழும்பு: இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லாக, நாட்டின் முதலாவது தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்காட்சி மற்றும் மாநாடு 2025, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த மாபெரும் நிகழ்வில், 12,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 50க்கும் மேற்பட்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட பேச்சாளர்கள், மற்றும் 35க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் கண்காட்சியாளர்கள் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைந்தனர்.
புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு மூலம், செயற்கை நுண்ணறிவால் வலுவூட்டப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. கல்வி மூலம் தொழில்நுட்பத்தில் சிறந்த ஒரு குழுவை உருவாக்கி, இலங்கையை டிஜிட்டல் மயமாக்குவதே அரசின் நோக்கம் என இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
