கொழும்பு: சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான நிறுவனம் (IDEA) வெளியிட்டுள்ள “2025 உலக ஜனநாயகத்தின் நிலை” அறிக்கையின்படி, இலங்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 இடங்கள் முன்னேறி, 173 நாடுகளில் 58ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
“குடிமக்கள் ஈடுபாடு” மற்றும் “தேர்தல் பங்கேற்பு” ஆகியவற்றில் உலகின் முதல் 25 சதவீத நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், ஒன்றுகூடல் சுதந்திரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள அதேவேளை, தெற்காசியாவின் ஏனைய நாடுகளான இந்தியா (73ஆவது இடம்), பாகிஸ்தான் (113ஆவது இடம்) மற்றும் வங்கதேசம் (151ஆவது இடம்) ஆகியவை தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன.
