கொழும்பு: இந்த வருடத்தில் இதுவரை, 1,612 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற 159ஆவது பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 17 குற்றவாளிகளும் இந்த ஆண்டிற்குள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.