ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தென்னாப்பிரிக்க ஜனாதிபதியுடன் நியூயோர்க்கில் சந்திப்பு!
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவை கடந்த செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நியூயோர்க்கில் உள்ள ONE Plazaவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
இந்தச் சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு, இருதரப்பு சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
