Headlines

Time Out சஞ்சிகையின் ஒக்டோபர் மாதப் பயணப் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்

கொழும்பு: சர்வதேச சுற்றுலா வழிகாட்டியான “Time Out” சஞ்சிகை, 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பயணிக்க உலகின் மிகச் சிறந்த நாடாக இலங்கையைத் தெரிவு செய்து, முதலிடம் வழங்கியுள்ளது. ஒக்டோபர் மாதம், இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் நெரிசல் குறைவாகவும், விலைகள் குறைவாகவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சாதகமான காலநிலையும் நிலவும் ‘shoulder season’ என்பதால், இதுவே இலங்கைக்கு விஜயம் செய்யப் பொருத்தமான மாதம் என அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரைகள், வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சீகிரியா பாறைக் கோட்டை, நுவரெலியாவின் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் யால தேசியப் பூங்கா சஃபாரிகள் ஆகியவை பயணிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரம், நாட்டின் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *