Headlines

பாடசாலை நேரம் மாலை 4:30 வரை நீடிப்பு? – பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய யோசனையை வெளிப்படுத்தினார்!

கொழும்பு, நவ. 3 பாடசாலை நேரத்தை மாலை 4:30 மணி வரை நீடிப்பதற்கான யோசனை ஒன்று உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய வார இறுதியில் வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகளுடன் வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் அமரசூரிய இந்தத் தகவலை வெளியிட்டார்.

எனினும், பாடசாலை நேரத்தை மேலும் நீடிப்பது தொடர்பான உறுதியான திட்டங்கள் எதனையும் அவர் குறிப்பிடவில்லை.

இந்தக் கலந்துரையாடலின் போது உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் கலந்துரையாடினார்.

பாடசாலை நேரத்தை அரை மணி நேரத்தால் நீடிப்பதற்கு அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னர் எடுத்த தீர்மானத்திற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *