Headlines

ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி: கடைசி நேர கோலால் துருக்மெனிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

கொழும்பு: 2027ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கால்பந்தாட்டத் தகுதிகாண் போட்டியில், பலம் வாய்ந்த துருக்மெனிஸ்தான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று (09) இரவு நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக மோதின. போட்டியின் இறுதி நிமிடங்கள் வரை கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில், 88ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர் ராகுல் கிருஷ்ணா அடித்த கோல், அணியின் வெற்றியை உறுதி செய்தது.

சொந்த மண்ணில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி, ஆசியக் கிண்ணத்திற்குத் தகுதிபெறும் இலங்கை அணியின் கனவிற்குப் புத்துயிர் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *