Headlines

ஆசியக் கிண்ணம்: சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவது யார்? – இன்று இலங்கையும் ஆப்கானிஸ்தானும் மோதல்!

அபுதாபி: 2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20 தொடரின் ‘குரூப் பி’-யிலிருந்து சூப்பர் 4 சுற்றுக்கான இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் போட்டியில், இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இன்று (18) மோதுகின்றன. வங்கதேசம் தனது அனைத்துப் போட்டிகளிலும் விளையாடி 4 புள்ளிகளுடன் உள்ள நிலையில், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையில் அடுத்த சுற்றுக்குச் செல்ல மும்முனைப் போட்டி நிலவுகிறது. நேரடி வெற்றி தேவைப்படும் நிலையில் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது. இலங்கை அணியைப் பொறுத்தவரை, சிறந்த நெட் ரன் ரேட் இருப்பதால், மிக மோசமான தோல்வியைத் தவிர்த்தாலே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாம். அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *