Headlines

மகளிர் உலகக் கிண்ணம்: பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது இலங்கை

கொழும்பு: இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில், நடப்பு சம்பியனான பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவை இன்று (04) எதிர்கொள்கிறது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை அணிக்கு ‘வாழ்வா சாவா’ போட்டியாக அமைந்துள்ளது. தனது முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததால், தொடரில் நீடிக்க வேண்டுமானால், சமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். மறுபுறம், அவுஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று, இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *