Headlines

50 மி.மீ. மழைக்கு வாய்ப்பு! பலத்த காற்று எச்சரிக்கை! (Oct 24)

கொழும்பு: மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (ஒக். 24) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ.க்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

ஏனைய பகுதிகளில் வானிலை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

பலத்த காற்று எச்சரிக்கை

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *