கொழும்பு: மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (ஒக். 29) சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
