Headlines

இன்று சீரான வானிலை; நாளை முதல் மழை அதிகரிக்கும்

கொழும்பு: நாளை (03) முதல், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இன்று (02) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலையே நிலவும். மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும். நாளையிலிருந்து இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *