Headlines

இன்று (நவ 05) வடக்கு, ஊவா, திருகோணமலையில் மழை பெய்யலாம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கொழும்பு: இன்று (நவம்பர் 05) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு சில மழைவீழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *