கொழும்பு: மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (02) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகள் உள்ளிட்ட சில பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசும்.
இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இன்று நண்பகல் 12.10 மணியளவில் அன்டிகம, பலல்ல, மிகஸ்வெவ, பகமுன, செங்கலடி, ஏறாவூர் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நேர் மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.