தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்!
கொழும்பு: நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை, தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (22) இடைக்கிடையே மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
