இன்றைய வானிலை: நாடு முழுவதும் பிற்பகல் மழை, சில இடங்களில் பனிமூட்டம்
கொழும்பு: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று (09) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலதிக காலநிலைத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
