பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை: தென்மேற்குப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
கொழும்பு: மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர், பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலதிக காலநிலைத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
