Headlines

இன்றைய வானிலை அறிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்

கொழும்பு: மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய காலநிலை, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையின் தொடர்ச்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *