இன்றைய வானிலை: பிற்பகலில் இடியுடன் கூடிய மழை
கொழும்பு: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று (03) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரே, பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலதிக காலநிலைத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
