Headlines

கனமழை எச்சரிக்கை: 100 மி.மீ. மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

கொழும்பு: இன்று (04) பிற்பகல் வேளையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரே, பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலதிக காலநிலைத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *