Headlines

சப்ரகமுவா, மத்திய, ஊவா, வடக்கு மற்றும் திருகோணமலையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

கொழும்பு: சப்ரகமுவா, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனிமூட்டமான நிலை

மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை!

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *