Headlines

நாணய சுழற்சியில் வென்றது இலங்கை: இந்தியா முதலில் துடுப்பாட்டம்

துபாய்: 2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20 தொடரின் கடைசி சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது. துபாயில் இன்று (26) நடைபெறும் இந்தப் போட்டி, ஒரு சம்பிரதாயப் போட்டியாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டன. இலங்கை அணி, தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. செப்டம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. அணிகளின் விபரம்: இந்திய அணி: அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி. இலங்கை அணி: பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலங்க (தலைவர்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *