SSMB 29′ ஃபர்ஸ்ட் லுக்: ‘அவதார்’ இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிடுவாரா?

சென்னை: எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிக்கும் ‘SSMB 29’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வரும் நவம்பர் மாதம் வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசியின் வரலாற்றை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்திற்காக, ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு இருவரும் சம்பளம் பெறாமல், படத்தின் வருவாயில் தலா 20 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்புத் தளத்திலிருந்து சில காட்சிகள் கசிந்ததால், தற்போது மிக பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ‘RRR’ படத்தைப் பார்த்து ராஜமௌலியைப் பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன், தனது ‘அவதார் 3’ பட விளம்பரத்திற்காக இந்தியா வரும்போது, ‘SSMB 29’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *