கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஏனையோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, உயர் நீதிமன்றம் இன்று (01) அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், எப்பாவல பொஸ்பேட் படிவுகளில் இருந்து பெறப்பட்ட பொஸ்பேட் இருப்புக்கள், சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமானதாகக் கூறப்படும் பல நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.