Headlines

சூர்யா 46′ படத்தின் டிஜிட்டல் உரிமையை ₹85 கோடிக்கு வாங்கியதா நெட்ஃபிளிக்ஸ்?

சென்னை: இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 46’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் 85 கோடி ரூபாய் வரையிலான பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் ‘கருப்பு’ படத்திற்கு ஓடிடி வியாபாரம் முடிவாகாததால் அதன் வெளியீட்டுத் திகதி தள்ளிப்போவதாகக் கூறப்படும் நிலையில், ‘சூர்யா 46’ படத்திற்குப் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்துள்ளது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் வெங்கி அட்லூரியின் முந்தைய படமான ‘லக்கி பாஸ்கர்’ பெற்ற வெற்றியே, இந்த பிரம்மாண்ட வியாபாரத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி, சூர்யாவின் இதர திரைப்படங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *