கொழும்பு: ஊடகவியலாளர் போர்வையில் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கரக் கட்டா’வைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கெஹெல்பத்தர பத்மே’யின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (02) மஹரகமவில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரிவோல்வர் ரகத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் பகுதியளவில் எரிக்கப்பட்ட வீடியோ கமெரா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.