Headlines

பத்மே’யிடம் நடத்திய விசாரணையில் மேலும் ஆயுதங்கள் மீட்பு: T-56 ரவைகள், கைத்துப்பாக்கி சிக்கியது!

கொழும்பு: கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கெஹெல்பத்தர பத்மே’யிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, மேலும் பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது, பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட T-56 ரகத் தோட்டாக்கள், நான்கு T-56 மகசின்கள் மற்றும் ஒரு மைக்ரோ கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *