தங்காலையில் 400 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது: லொறியுடன் சாரதி கைது!
தங்காலை: தங்காலையில் இன்று (22) காலை நடத்தப்பட்ட அதிரடிச் சுற்றிவளைப்பில், லொறி ஒன்றிலிருந்து 400 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான, சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) மற்றும் விசேட அதிரடிப் படை (STF) இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது, லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறியில் இருந்த இரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இது, நாட்டில் சமீப காலத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகைகளில் ஒன்றாகும். இந்த குற்றச் செயல்களின் பின்னணியில் உள்ள வலையமைப்பு குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
