Headlines

த்ரிஷ்யம்’ பாணியில் மோகன்லால்: ஓடிடி-யில் வெளியானது ‘தொடரும்’ க்ரைம் த்ரில்லர்!

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில், திரையரங்குகளில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ‘தொடரும்’ திரைப்படம், தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக வாழும் மோகன்லால், பொலிஸாரால் மிரட்டப்பட்டு, தனது காரில் உள்ள ஒரு சடலத்தை அப்புறப்படுத்த உதவுகிறார். ஆனால், அந்த சடலம் யார் என்பது தெரியவரும்போது, கதை எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கிறது. தவறுதலாகத் தன் மகனையே கொலை செய்து புதைக்க உதவியதை உணரும் ஒரு தந்தையின் பழிவாங்கலே இப்படத்தின் கதை. த்ரிஷ்யம் படத்திற்குப் பிறகு, மோகன்லாலுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு வெற்றிகரமான ஃபேமிலி த்ரில்லராக இப்படம் பாராட்டப்படுகிறது. இந்த திரைப்படம் க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *