கொழும்பு: இலங்கையில் இன்றைய (ஒக். 29) தங்கத்தின் விலையானது, நேற்றைய (ஒக். 28) விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2,000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தை தகவல்களின்படி, நேற்று 296,000 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் (22-carat) தங்கப் பவுண் ஒன்றின் விலை, இன்று 294,000 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, நேற்று 320,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் (24-carat) தங்கப் பவுண் ஒன்றின் விலை, இன்று 318,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புறக்கோட்டை தங்கச் சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
