மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மீது உக்ரைன் அதிநவீன ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில், அவை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதனால், செயின்ட்பீட்டர்ஸ்பக் உள்ளிட்ட பல ரஷ்ய நகரங்களில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா எதிர்த்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என உலகப் பொருளாதார நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இந்தியாவிற்கு எண்ணெய் வழங்கும் ரஷ்ய உற்பத்தி மையங்களைக் குறிவைத்து, உக்ரைன் மூலம் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
இந்தத் தாக்குதலால், ரஷ்யாவிலிருந்து இந்தியா பெறும் மலிவு விலை கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், இந்தியா அரபு நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதால், உள்நாட்டில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது எனவும் கணிக்கப்படுகிறது.