சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை உறுதி செய்தல்: ஐ.நா. குழுவுடன் கலந்துரையாடல்
இலங்கையின் தேர்தல் முறைமைகள் குறித்து ஐ.நா. குழுவுடன் சபாநாயகர் சந்திப்பு!
கொழும்பு: இலங்கையின் தேர்தல் செயன்முறைகள் மற்றும் முறைமைகளை மீளாய்வு செய்வதற்காக வருகை தந்துள்ள, ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப தேர்தல் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (07) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின்போது, வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கிய தன்மை, பெண்களின் பங்கேற்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் வகையில், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களை உறுதி செய்தல் ஆகியவை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
