Headlines

துபாயில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பஸ் லலித்’ கைது!

கொழும்பு: துபாயில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை இயக்கி வந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பஸ் லலித்’ கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், துபாய் பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில், நேபாளத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இஷார சேவந்தி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்தை’ இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *