Headlines

ரணில் தலைமையில் ஐ.தே.க. மாநாடு: எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

கொழும்பு: இலங்கையின் பழம்பெரும் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) 79ஆவது ஆண்டு நிறைவு மாநாடு, அக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (20) நடைபெறுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஐ.தே.க. அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் கலந்துகொள்ளாத போதிலும், அவரது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஐ.தே.க.விலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை அக்கட்சி நீக்கியிருந்த நிலையில், இந்த மாநாடு அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *