கொழும்பு: பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ, அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கடத்தப்பட்ட விதம் குறித்த புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
சட்டத்தரணி போன்று உடையணிந்த நபர் ஒருவர், சட்டப் புத்தகம் ஒன்றின் நடுப்பகுதியைக் குடைந்து, அதற்குள் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழையும் காட்சிகள் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளன.
புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் துப்பாக்கியே பின்னர் நீதிமன்ற அறைக்குள் வைத்து, கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.