Headlines

மாணவி வித்யா படுகொலை: உயர்நீதிமன்றம் விசாரணையை நிறைவு செய்தது – தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

கொழும்பு – 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட “சுவிஸ் குமார்” உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

அன்றைய தினம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணைகள் முடிவடைந்த நிலையில், அதன் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற அமர்வு இன்று (நவ. 06) அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *