Headlines

வெலிகம பிரதேச சபை தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு! சபை அறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

வெலிகம: வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர, சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் பிரதேச சபை அறையில் அமர்ந்திருந்த போதே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *