Headlines

வெலிகம தவிசாளர் ‘லசந்த விக்ரமசேகர,’ கொலை! துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர் பலி.

கொழும்பு, ஒக்டோபர் 22 : வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர, (‘மிடிகம லசா’ எனவும் அறியப்பட்டவர்), இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவரால் இவர் சுடப்பட்டார்.

வெலிகம பிரதேச சபை அதிகாரிகள் உடனடியாகத் தவிசாளரை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் ஒரு கடிதத்தில் கையொப்பம் பெறுவதற்காக வருபவர்களைப் போல பாசாங்கு செய்து, அலுவலகத்திற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *