வாட்ஸ்அப்பில் இனி மொழிப் பிரச்சினையே இல்லை: புதிய ‘டிரான்ஸ்லேட்’ வசதி அறிமுகம்!
கலிபோர்னியா: உலகம் முழுவதும் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலியில், செய்திகளை மொழிபெயர்க்கும் (Translate) புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்கு வரும் செய்தியை நீண்ட நேரம் அழுத்தி, ‘டிரான்ஸ்லேட்’ என்பதைத் தட்டுவதன் மூலம், விரும்பிய மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும். தனிப்பட்ட உரையாடல்கள், குழுக்கள் (groups) மற்றும் சேனல்கள் என அனைத்திலும் இது செயல்படும்.
முக்கியமாக, இந்த மொழிபெயர்ப்பு பயனரின் சாதனத்திலேயே (on your device) நடைபெறுவதால், செய்திகளின் தனியுரிமை பாதுகாக்கப்படும் எனவும், அவற்றை வாட்ஸ்அப்பால் பார்க்க முடியாது எனவும் மெட்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த தொழில்நுட்ப உலகில் இது ஒரு முக்கிய அம்சமாகும். முதற்கட்டமாக, ஐபோன்களில் 19 மொழிகளிலும், ஆண்ட்ராய்டில் 6 மொழிகளிலும் இந்த வசதி கிடைக்கும்.
