’80ஸ் ரீயூனியன்’ நிகழ்ச்சிகளில் பானுப்ரியா கலந்துகொள்ளாதது ஏன்? – நடிகர் பானுசந்தர் விளக்கம்!
சென்னை: ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ’80ஸ் ரீயூனியன்’ நட்சத்திரங்களின் சந்திப்பில், அந்தக் காலக்கட்டத்தின் முன்னணி நடிகையான பானுப்ரியா கலந்துகொள்ளாததற்கான காரணத்தை, சக நடிகரான பானுசந்தர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கியுள்ளார்.
“ஆரம்பத்தில் சில கூட்டங்களில் கலந்துகொண்ட பானுப்ரியா, பின்னர் வரவில்லை. அவரது குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்ததே அதற்குக் காரணம்,” என பானுசந்தர் கூறினார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பானுப்ரியாவின் கணவர் ஆதர்ஷ் கௌசல் காலமானார். அந்தத் துயர நிகழ்வு அவரை மனதளவில் மிகவும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தனிப்பட்டப் போராட்டங்கள் காரணமாகவே, அவர் இது போன்ற பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார். திரையுலகில் உள்ள அவரது நண்பர்கள், அவரை மிகவும் ‘மிஸ்’ செய்வதாகவும் பானுசந்தர் உருக்கமாகத் தெரிவித்தார்
