Headlines

அனர்த்த நிவாரண நிதிக்கு GovPay ஊடாக நன்கொடை: நிதி அமைச்சின் புதிய வசதி அறிமுகம்!

கொழும்பு, டிசம்பர் 01: நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும், வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரச கொடுப்பனவுக்கான பிரதான தளமாக விளங்கும் GovPay ஊடாக, எவர் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், உடனடியாக நன்கொடைகளைச் செலுத்த முடியும்.

இதில், நன்கொடைப் பணம் உடனடியாக நிதிக்கு வரவு வைக்கப்படுவதுடன், வீட்டில் இருந்தோ அல்லது எங்கிருந்தோ இலகுவாக நன்கொடை வழங்கக்கூடியதாகவும், அத்துடன் அந்த செயல்முறை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

GovPay உடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் (Commercial Banks) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட FinTech செயலிகள் (Apps) பலவற்றின் மூலம் இந்த அனர்த்த நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடியும்.

நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வங்கிகள் மற்றும் FinTech செயலிகளின் பட்டியலை அறிந்துகொள்ள பின்வரும் இணைப்பிற்குச் செல்ல முடியும்: https://govpay.lk/si/supported-banks-fintech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *